இவர்கள் உங்கள் மனதுக்குள் இருக்கும் ஆத்மார்த்தமான தூய பக்தியை வெளியே கொண்டு வரவும் அதை கடவுளிடம் கொண்டு செல்லவோ உங்களை தேடி வரவில்லை.
உங்கள் வியர்வையினாலும் ரத்தத்தினாலும் கடின உழைப்பாலும் சிந்தனையாலும் நீங்கள் உருவாக்கிய உங்கள் செல்வத்தை சுரண்ட வந்துள்ளனர்.
கடவுள் உங்களை அணுக அவருக்கு யாரும் தேவையில்லை.
நீங்கள் செய்த தவறுக்காக உங்களுக்காக கடவுளிடம் யாராவது பரிந்து பேச வேண்டுமானால் உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஒருவர் இருப்பதில் தவறில்லை.
அந்த மன்னிப்பை கூட கடவுளிடம் நீங்கள் நேரடியாக கேட்பதாக இருந்தால் அந்த மூன்றாவது நபரும் தேவையில்லை.
பரிகாரம் என்பது கடவுளை வளைக்க நினைக்கும் ஒரு வியாபாரம்.
கடவுளிடம் வியாபாரம் பேசும் எவரும் தோல்வியடைவர்.
உங்கள் மனதின் ஆழத்திலிருந்து கடவுள் மீது எழும் அன்பும்.
உங்கள் மனதின் ஆழத்திலிருந்து கடவுளிடம் நீங்கள் கேட்கும் மன்னிப்பும்.
இரண்டையும் கடவுள் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறார்.
உங்களுக்கு என்ன தேவை என்பது கடவுள் அறிந்து வைத்திருக்கிறார்.
உங்கள் எண்ணம் தூய்மையானதாக இருந்தால் அதை அவர் தக்க சமயத்தில் உங்களிடம் சேர்க்கிறார்.
உங்களிடம் கைமாறு பெற்றுக் கொண்டோ, உங்களை வருத்திக்கொண்டு நீங்கள் கேட்கும் வேண்டுதலையோ கொடுப்பதற்கு கடவுள் வியாபாரி அல்ல.
எந்தக் கடவுளும் மூடநம்பிக்கைகளை போதிக்கவில்லை.
உங்களை நீங்கள் வருத்திக் கொள்வதை பார்த்து ஆனந்தம் அடைபவர் கடவுள் இல்லை.
உங்களிடம் கடவுள் எந்த ஏற்றத்தாழ்வுகளையும் பார்க்கவில்லை.
அப்படி பார்ப்பவர் கடவுளாக இருக்க வாய்ப்பு இல்லை.
இதைத்தான் தந்தை பெரியார் அவர்களும் கூறுகிறார்.
இதோ கமெண்டில் உள்ளவற்றை நீங்களே பாருங்கள்... எச்சரிக்கையாக இருங்கள்...