வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, இன்று (26.10.2026), வடக்கு வட்டாரத் துணை ஆணையாளர் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம் – 1, வார்டு – 18-க்கு உட்பட்ட மாத்தூர், எம்.எம்.டி.ஏ. 57-ஆவது தெருவில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களுக்காகத் தயாரிக்கப்படும் உணவின் தரம் மற்றும் நிவாரண மையத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
#ChennaiCorporation |
#NammaChennai |
#HeretoServe
@CMOTamilnadu |
@TNDIPRNEWS |
@MawsTamilNadu