முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேளாண்மைத் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 69 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
#CMVijay | #TNPSC | #TNGovt | #TVK | #VikatanReels
ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இணைந்து நடத்தும் UPSC/TNPSC Group - I, II தேர்வுகளில் வெல்வது எப்படி? மற்றும் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான Scholarship இலவசப் பயிற்சி முகாம்
Register Now: forms.gle/ixhqCRfyoAFPS12u8
நாள்: 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை
இடம்: எத்திராஜ் மகளிர் கல்லூரி, எழும்பூர், சென்னை.
நேரம்: காலை 9:00 am to 1:30 pm
அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!
"கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எப்போதும் வீ தி லீடர்ஸ் அமைப்பு ஆதரவு கொடுக்காது. ஏனென்றால், அவர்களின் இலக்கு வேறு; நம்முடைய இலக்கு வேறு." - அண்ணாமலை
#Annamalai | #WeTheLeaders | #CJP
"புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது. அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் திரு.விஜய் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?" - கனிமொழி
#Kanimozhi | #DMK | #TVK | #Vijay
தங்களது மகள் திருமணத்தின் அழைப்பிதழை முதல்வரிடம் நேரில் சென்று அளித்த மாநிலங்களவை உறுப்பினர் சுதீஷ் மற்றும் அவரது மனைவி. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் இருந்தார்.
#Sudhish | #Vijay | #TVK | #DMDK
"கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை." - அமைச்சர் வன்னி அரசு
#VanniArasu | #DMK | #NTK | #Seeman
"மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பணியாற்றிட எனது வாழ்த்துகள்!" - முதலமைச்சர் விஜய் ட்வீட்
#CMVijay | #AmitShah
தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் அருவிகளுக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரே இரவில் மொத்தம் 588 மி.மீ மழை பதிவாகியுள்ளது; இதில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 90 மி.மீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்கும் நீர்வரத்துத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
#Tenkasi | #TNRains | #Flood | #VikatanReels
சீனாவை சேர்ந்த ரோபோடிக்ஸ் நிறுவனமான 'யூனிட்ரீ' (Unitree), மனிதர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'H2-X குங்ஃபூ லெஜண்ட் கார்டியன்' எனும் புதிய Humanoid ரோபோவை காட்சிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஒரு நிமிட வீடியோ தற்போது இணையத்தில் வைரல்.
#Unitree | #H2X | #UnitreeH2X | #HumanoidRobot | #KungFuRobot